Pages

Monday, July 11, 2011

துருக்கி லிபிய போராளிகள் அமைப்பை அங்கீகரி்த்துள்ளது...

துருக்கி லிபியாவின் கடாபிக்கு எதிராக போராடிவரும் போராளிகள் அமைப்பான தேசிய இடைக்கால கவுன்சிலைஅங்கீகரித்துள்ளதுடன் லிபிய தலைநகர் திரிபோலியில் அமைந்திருந்த துருக்கி தூதுவர் அலுவலகத்தை மூடியுள்ளது. அதேவேளை துருக்கி அரபு -துருக்கி வங்கியில் உள்ள லிபியாவின் சொத்துகளையும் முடக்கியுள்ளதாக அறிவித்துள்ளது .

பதவியில் தொடர்ந்து நீடிக்கப் போகும் யென் ஜனாதிபதி!!

 தாக்குதல் ஒன்றில் படுகாயம் அடைந்த யெமன் ஜனாதிபதி அலி அப்துல்லா ஸாலிஹ் ஒரு மாதத்தின் பின்னர் தேசிய தொலைக்காட்சில்நேற்று தோன்றி உரையாற்றியுள்ளார். யெமன் ஜனாதிபதி  ஸாலிஹ் கடந்த ஜூன் மாதம் 3 ஆம் திகதி வெள்ளிகிழமை அவரின் ஆடம்பர மாளிகை மீது இடம்பெற்ற செல் தாக்குதல் ஒன்றில் படுகாயம் அடைந்த நிலையில் சவூதி அரேபியாவின் இராணுவ மருத்துவ மனையில் சிகிச்சை பெற்றுவந்தார்.

துருக்கி தனது இஸ்ரேல் மீதான நிலைப்பாட்டை மீண்டும் வலியுருத்தியுள்ளது..

துருக்கியில் மூன்றாவது தடவையாக பெரும்பான்மை பலத்துடன் அதிகாரத்தை கைப்பற்றியுள்ள துருக்கி பிரதமர் ரஜப் தயூப்அர்துகான் இஸ்ரேலுடன் சுமூக உறவை ஏற்படுத்துவதை நிராகரித்துள்ளார். கடந்த ஆண்டு இஸ்ரேல் ஆக்கிரமிப்பு படை காஸாவுக்கு உதவி நிவாரணப் பொருட்களை ஏற்றிச் சென்ற கப்பல் தொடரணி மீது தாக்குதல் நடத்தியதில் 9 துருக்கிய மனித நேய செயற்பாட்டாளர்கள் கொல்லப்பட்டனர்.

அல் கைதாவை அடியோடு அழிப்பேன் - அமெரிக்க புதிய பாதுகாப்பு அமைச்சர் அறைகூவல்....

அமெரிக்காவின் சி.ஐ.ஏ.  உளவு நிறுவனத்தின் தலைவராக பணிபுரிந்தவர் லியோன் இ பனேட்டா. இவரது தீவிர முயற்சி மற்றும் அறிவாற்றலால்தான் பாகிஸ்தான் அபோதாபாத்தில் இருந்த பின்லேடன் அமெரிக்க படையினரால் சுட்டுக் கொல்லப்பட்டார். 

இதை தொடர்ந்து ராபர்ட் கேட்ஸ்சுக்கு பதிலாக புதிய ராணுவ மந்திரியாக பனேட்டா நியமிக்கப்பட்டு பொறுப்பேற்றுள்ளார். பதவி ஏற்றவுடன் முதன் முதலாக எந்தவித முன் அறிவிப்பும் இன்றி நேற்று விமானம் மூலம் ஆப்கானிஸ்தான் வந்தார்.   அங்கு, முகாமிட்டுள்ள அமெரிக்க ராணுவத்தினரை சந்தித்து பேசினார். பின்னர் அவர் செய்தி நிறுவனத்துக்கு அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது,

பலஸ்தீன் தனி நாடாக மாற 128 நாடுகளின் ஆதரவு அவசியம் - Muslims Base

ஐக்கிய நாடுகள் சபையில் தனி நாடு அங்கீகாரம் பெற பாலஸ்தீனம் முயற்சிக்கிறது. இந்த நடவடிக்கையை கனடா கடுமையாக எதிர்க்கிறது.

பாலஸ்தீனம் தனி நாடு அந்தஸ்தை பெறுவதில் இஸ்ரேலுக்கும், அமெரிக்காவுக்கும் விருப்பம் இல்லை. பாலஸ்தீன நிர்வாகம் மேற்கு கரையின் பெரும்பாலான பகுதியை நிர்வகித்து வருகிறது. அந்த நிர்வாகம் தனி நாடு கோரிக்கை தொடர்பாக கடந்த மாதம் பிரசாரத்தை துவக்கி உள்ளது. 

அமெரிக்கா மனித உரிமை மீறலில் முன்னிலையில் - மனித உரிமை அமைப்பு குற்றச்சாட்டு

மனித உரிமை மீறல்கள் தொடர்பில் அமெரிக்கா இரட்டை நிலைப்பாட்டைக் கொண்டிருக்கவில்லையாயின் முன்னாள் அமெரிக்க ஜனாதிபதி ஜோர்ஜ். டபிள்யூ.புஷ்ஷின் காலத்தில் சிறையில் தடுத்துவைக்கப்பட்டிருந்த சிறைக்கைதிகளின் உரிமைகள் மீறப்பட்ட விடயம் தொடர்பான விசாரணைகளை அமெரிக்க ஜனாதிபதி பராக் ஒபாமா நிர்வாகம் மேற்கொள்ளவேண்டுமென மனித உரிமைகள் கண்காணிப்பகம் கோரிக்கை விடுத்துள்ளது.

சவுதியின் சோகம்

"சவூதி அரேபிய மக்கள் தொகையில், 70 சதவீதம் பேர் உடல் பருமன் பிரச்னை கொண்டவர்கள்' என, ஆய்வு ஒன்றில் தெரியவந்துள்ளது. அறிவியல் கண்டுபிடிப்புகளின் காரணமாக, தற்காலத்தில் நவீன வசதிகள் அதிகரித்து, மக்களின் உடலுழைப்பு வெகுவாக குறைந்து விட்டது. மேலும், எண்ணெய் மற்றும் கொழுப்புச் சத்துள்ள பொருட்களை அதிக அளவு பயன்படுத்துதல் போன்ற காரணங்களால், மக்களுக்கு உடல் பருமன் அதிகரித்து வருகிறது. அண்மையில் நடத்தப்பட்ட ஆய்வு ஒன்றில், சவுதி அரேபிய மக்கள் தொகையில், 70 சதவீதம் பேர் உடல் பருமன் பிரச்னை கொண்டவர்கள் என, தெரியவந்துள்ளது.

அமெரிக்க நிதி உதவி பாகிஸ்தானிற்கு முடக்கம் - இந்தியா வரவேற்பு

பாகிஸ்தானில் பதுங்கியிருக்கும் முஸ்லிம் போராளிகளை ஒழிக்க அந்நாட்டுக்கு அமெரிக்கா ரூ.10 ஆயிரம் கோடிக்கு மேல் நிதி ஒதவி வழங்கி வருகிறது. ராணுவ தளவாடங்கள் வாங்க இந்த நிதி பயன்படுத்தப்பட்டு வருகிறது. ஆனால் முஸ்லிம் போராளிகளின் சொர்க்கமாக பாகிஸ்தான் விளங்கி வருகிறது. கடந்த 7 ஆண்டுகளாக பாகிஸ்தானில் பதுங்கி இருந்த அல்கொய்தா தலைவர் பின்லேடன் அமெரிக்க ராணுவத்தினரால் சுட்டுக் கொல்லப்பட்டார். 

பிரான்ஸ் அரசுடன் கேர்ணல் கடாபியின் மகன் பேச்சு வார்த்தை

பிரான்சு நாட்டுடன் அமைதிப் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளதாக, லிபியா தலைவர் கடாபியின் மகன் சயீப் அல் இஸ்லாம் தெரிவித்துள்ளார். "லிபியா தலைவர் கடாபி பதவி விலக வேண்டும். அதுவரை பேச்சுவார்த்தைக்கே இடமில்லை' என்று அந்நாட்டு கிளர்ச்சியாளர்கள் கூறி வருகின்றனர். தொடர்ந்து நேட்டோ நாடுகளும், "கடாபி பதவி விலக வேண்டும்' என, வற்புறுத்தி வருகின்றன. ஆனால், "ஐரோப்பிய நாடுகளுக்கு பயங்கரவாதிகளை அனுப்புவேன்' என்று கடாபி சவால் விடுத்து வருகிறார்.

Monday, July 4, 2011

தாய்லாந்து முஸ்லிம்கள் - கார் குண்டு தாக்குதலின் நிகழ் காணொளி

தாய்லாந்தின் தென்பகுதியில் முஸ்லிம்கள் தமது சுயநிர்ணய உரிமைக்காக போராடுவதும் அதை தாய்லாந்து நாட்டு இராணுவம் மிருகத்தனமாக நசுக்குதும் நாம் அறியாத உண்மைகளாகும். அந்த வகையில் அதிக சன நெரிசல் மிக்க நகர்பகுதியி்ல் முஸ்லிம்களை இலக்கு வைத்து தாய்லாந்தின் அரச ஆதரவு கிறிஸ்தவ குழுவால் மேற்கொள்ளப்பட்ட கார் குண்டுவெடிப்பின் நேரடி காட்சி இணையங்களில் ஒளிபரப்பப்பட்டது. அந்த காட்சி இதோ........

திரிப்போலியில் திரண்ட மனித கடல் - கடாபியின் அறைகூவல்

திரிப்போலியில் திரண்ட் சுமார் 5 இலட்சத்திற்கும் மேற்பட்ட ஆதரவாளர்களிந்கு மத்தியில் உரை நிகழ்த்திய கேர்ணல் கடாபி அமெரிக்காவினதும் மேற்குலகினதும் தாக்குதலை கண்டு அஞ்சப்போவதில்லை என்று பறைசாற்றியுள்ளார். லிபியாவில் அவர்கள் செய்யும் அழிவுகளிற்கு இரண்டு மடங்கான அறுவடையை அவர்கள் தம் நாடுகளில் காண்பார்கள் என்றும் அவர் கூறியுள்ளார்.

Sunday, July 3, 2011

இனி ஈரானிய எண்ணெய் இந்தியாவிற்கு இல்லை..

இந்தியாவிற்கான கச்சாய் எண்ணெய் ஏற்றுமதியை பரிபூரணமாக நிறுத்திவிடப் போவதாக ஈரானிய அரசு இந்தியாவை எச்சரித்துள்ளது. கடந்த டிசம்பர் மாதம் முதல் மே மாதம் வரை நிலுவையில் உள்ள 09 பில்லியன் டொலர் பெருமதியான கடனை உடன் திருப்பித் தருமாறு ஈரானிய எண்ணைய் வளத்துறை அமைச்சு இந்திய அரசை கோரியுள்ளது.
ஈரானின் முக்கிய எண்ணெய் ஏற்றுமதி நாடுகளுல் இந்தியாவும் ஒன்றென்பது குறிப்பிடத்தக்கது.

Saturday, July 2, 2011

மெரோக்கோ மக்கள் எழுச்சி!! அச்சத்தில் மன்னர் முஹம்மத்

மொராக்கோவில் நேற்று நடாத்தப்பட்ட கருத்துக்கணிப்பு வாக்கெடுப்பில் ஜனநாயக சீர்திருத்தங்களை அரசியல் யாப்பில் அறிமுகப்படுத்தும் முடிவிற்கு ஆதரவாக வாக்களித்துள்ளதாக மொரோக்கா அரசு அறிவித்துள்ளது. 98 விகிதமானவர்கள் மன்னரிடம் அதிகாரங்கள் இருக்க வேண்டும் என விரும்வுபதாக வாக்களித்துள்ளதாக தெரிவித்துள்ளது. மேற்படி முடிவை மொரோக்கோ எதிர் கட்சிகள் வன்மையாக கண்டித்துள்ளதுடன் இது ஒரு ஜனநாயக பித்தலாட்டம் எனவும் குறிப்பிட்டுள்ளன.

சிரிய ஆர்ப்பாட்டக்காரர்கள் மீதான தாக்குதலில் 24 பேர் பலி..

வெள்ளிக்கிழமை தொழுகையின் பின் சிரியாவின் மூன்றாவது பெரிய நகரான ஹோம்ஸிலும் பிரிதொரு நகரான ஹனாவிலும் திரண்ட அரச எதிர்ப்பு ஆர்ப்பாட்டக்காரர்கள் அதிபர் அஸாத்திற்கு எதிரான பதாதைகளை தாங்கியவாறு அணிவகுத்துச் சென்றனர். ”அஸாத் அழைத்த பேச்சுக்களை ஏற்க மாட்டோம்”, ”40 ஆண்டுகள் சிரியாவை ஆண்ட குடும்பமே ஆட்சியை மக்களிடம் தா” போன்ற கோஷங்களுடன் சுமார் 200000 மேற்பட்ட ஆர்ப்பாட்டக்காரர்கள் பேரணியில் பங்கு பற்றினர்.

ஐரோப்பாவை தாக்கி பழிவாங்குவோம் - கேர்ணல் கடாபி சூளுரை..!

நேற்றைய வெள்ளிக்கிழமை திரிப்போலியில் உள்ள பச்சை சதுக்கத்தில் திரண்ட ஆதரவாளர்கள் மத்தியில் லிபிய அதிபர் கேர்ணல் கடாபி உரை நிகழ்த்தினார். ஆடியோவில் பதிவு செய்யப்பட்ட பேச்சே அவரது உரையாக அங்கு வெளியிடப்பட்டது. அதில் அவர் லிபியா மீது தாக்குதல் நடாத்தும் ஐரோப்பிய நாடுகளை கடுமையாக சாடியதுடன் எச்சரிக்கையும் விடுத்தார்.

Friday, July 1, 2011

இலங்கையின் அரசியல் தீர்வில் பலியாக்கப்படும் முஸ்லிம் தரப்பு..!

லங்கையின் இனப்பிரச்சனைக்கான அரசியல் தீர்வு குறித்த அழுத்தங்கள் அதிகரித்து வரும் நிலையில், இலங்கையின் அதிபர் மஹிந்த ராஜபக்ஸ அவர்கள் நாடாளுமன்ற தெரிவுக் குழுவால் சமர்ப்பிக்கப்படும் எந்தவொரு உத்தேச தீர்வு திட்டத்தையும் தாம் அமுல்படுத்த தயார் என அறிவித்துள்ளார்.

ஹிஸ்புல்லாஹ்வின் பின்புல அரசியல் என்ன?

ஹிஸ்புல்லாஹ். மத்திய கிழக்கின் நாடில்லாத இராணுவம். இன்னொரு நாட்டு ராணுவத்துடன் மோதும் ஆற்றல் மிக்க இராணுவ கட்டமைப்பை கொண்டுள்ள போராளிகள் அமைப்பு. பல நாடுகளில் உள்ள இராணுவங்களை விட வலிமைமிக்க தாக்குதல் வல்லமையும் தொழில்நுட்பங்களையும் தன்வசம் கொண்டுள்ள அமைப்பு.

அமெரிக்காவில் நடந்த இரகசிய கூட்டம்.!

கடந்த புதன்கிழமை அமெரிக்க அதிபர் ஒபாமா தலைமையில் பென்டகனில் நடைபெற்ற அதி முக்கியத்துவம் நிறைந்த இரகசிய கூட்டம் சுமார் 8 மணி நேரங்கள் நீடித்துள்ளது. இராஜாங்க பாதுகாப்பு செயளர்,  செனட் காங்கிரஸ், முப்படை தளபதிகள், சீ.ஐ.ஏ. இயக்குனர், எப்.பீ.ஐ. இயக்குனர், ஆப்கான் மற்றும் ஈராக்கிய தேசங்களில் நிலைகொண்டுள்ள அமெரிக்க படைகளிற்கு பொறுப்பான கட்டளைத் தளபதிகள் போன்றவர்கள் உட்பட சுமார் 39 பேர் மேற்படி நிகழ்வில் கலந்து கொண்டுள்ளனர்.

காபூலின் நட்சத்திர ஹோட்டலில் தலிபான்களின் பாய்ச்சல்..

U.S. commando soldiers walk towards the the Inter Continental hotel after it was attacked by militants in Kabul, Afghanistan, Wednesday, June 29, 2011. Nகாபூலில் ஆப்கானிய அரசிற்கு சொந்தமான ஐந்து நட்சத்திர ஆடம்பர ஹோட்டலினுல் (Hill Top Global InterContinental) திடீரென புகுந்து மின்னல் வேக தாக்குதலை தலிபான் போராளிகள் நாடத்தியுள்ளனர். அவர்களது தாக்குதல் இலக்கை அவர்களால் வெற்றிகரமாக அடையமுடியாமல் அதில் ஈடுபட்ட 9 தலிபான் போராளிகளும் ஆப்கானிய பொலிஸார் மற்றும் ஹோட்டல் சிப்பந்திகள் என 12 பேருமாக மொத்தம் 21 பேர் பலியாகியுள்ளனர்.

எகிப்தில் மீண்டும் மக்கள் போராட்டம்..

UNREST IN EGYPT - Protesters and police clashed in Cairo yesterday as tensions rose over what government will emerge after the uprising that led to President Hosni Mubaraks overthrow in February. Demonstrators burned a police booth in front of the Interior Ministry, and police fired tear gas at hundreds of stone-throwing Egyptians. A6கெய்ரோ தஹ்ரீர் சதுக்கத்தில் மீ்ண்டுமொரு முறை திரண்ட ஆர்ப்பாட்டக்காரர்களுடன் ஏற்பட்ட மோதலில் வன்முறை வெடித்தது. ஆர்ப்பாட்டக்காரர்களை விரட்டுவதற்காக எகிப்திய கலகமடக்கும் பொலிஸார் தடியடி, நீர் பீரங்கி, கண்ணீர் புகை போன்றவற்றை பாவித்தனர். இதனால் வெருண்டோடிய ஆர்ப்பாட்டக்காரர்கள் பொலிஸாரை நோக்கி கல்வீச்சில் ஈடுபட்டனர்.

C.B.I. Final Report - சாதிக் பாட்சா மரணம் - "கொலை"


சென்னை & டெல்லி: 2ஜி விவகாரத்தில் முக்கிய குற்றவாளிகளில் ஒருவராகவும் சாட்சியாகவும் இருந்த முன்னாள் தொலைத் தொடர்புத்துறை அமைச்சர் ராசாவின் நண்பரான சாதி்க் பாட்சா கொலை செய்யப்பட்டிருக்கலாம் என்று சிபிஐ சந்தேகி்க்கிறது.

சியோனிச தாளத்துக்கு ஆட்டம் போடும் பிரிட்டன்

 ஷேய்க் ரியத் சலாஹ் -Sheikh Raed Salah- என்ற ’1948 ஆம் ஆண்டு ஆக்கிரமிக்கப்பட்ட பலஸ்தீனின் இஸ்லாமிய இயக்கம்’ என்ற அமைப்பின் தலைவரை பிரிட்டன் கைது செய்துள்ளது. இந்த கைதையும் நுழைவு மறுப்பையும்  சியோனிச சக்திகளில் தாளத்துக்கு பிரிட்டன் ஆட்டம் போடுகின்றது என்று இஸ்ரேலிய அரபு முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.