Pages

Monday, July 11, 2011

அல் கைதாவை அடியோடு அழிப்பேன் - அமெரிக்க புதிய பாதுகாப்பு அமைச்சர் அறைகூவல்....

அமெரிக்காவின் சி.ஐ.ஏ.  உளவு நிறுவனத்தின் தலைவராக பணிபுரிந்தவர் லியோன் இ பனேட்டா. இவரது தீவிர முயற்சி மற்றும் அறிவாற்றலால்தான் பாகிஸ்தான் அபோதாபாத்தில் இருந்த பின்லேடன் அமெரிக்க படையினரால் சுட்டுக் கொல்லப்பட்டார். 

இதை தொடர்ந்து ராபர்ட் கேட்ஸ்சுக்கு பதிலாக புதிய ராணுவ மந்திரியாக பனேட்டா நியமிக்கப்பட்டு பொறுப்பேற்றுள்ளார். பதவி ஏற்றவுடன் முதன் முதலாக எந்தவித முன் அறிவிப்பும் இன்றி நேற்று விமானம் மூலம் ஆப்கானிஸ்தான் வந்தார்.   அங்கு, முகாமிட்டுள்ள அமெரிக்க ராணுவத்தினரை சந்தித்து பேசினார். பின்னர் அவர் செய்தி நிறுவனத்துக்கு அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது,
எனது, திறமையின் மீது எனக்கு நம்பிக்கை உள்ளது. அதன் மூலம் அல்கொய்தாகளை எங்களால் வெற்றி பெற முடியும். பாகிஸ்தான், சோமாலியா மற்றும் ஏமன் நாடுகளில் அல்கொய்தா இயக்கத்தைச் சேர்ந்த 10 முதல் 20 தலைவர்கள் பதுங்கி உள்ளனர். அவர்களை உயிருடனோ அல்லது பிணமாகவோ பிடிப்போம். 

பின்லேடன் கொல்லப்பட்ட பிறகு அந்த இயக்கம் தற்போது கடும் நெருக்கடியை சந்தித்துள்ளது. இதே நிலைமை தொடரும். இதன் மூலம் அல்கொய்தாகள் விரைவில் அழிக்கப்படுவார்கள். அவர்கள்தான் ஆப்கானிஸ்தானுக்கு மிகப்பெரிய அச்சுறுத்தலாக உள்ளனர் என்று தெரிவித்தார். மேலும் அவர் கூறும் போது, அல்கொய்தாவின் தற்போதைய புதிய தலைவர் அஸ்மான் அல்-ஜவாகிரி பாகிஸ்தானில் தான் பதுங்கி இருக்கிறார் என்றும் அவர் கூறினார்.

No comments:

Post a Comment