Pages

Friday, July 1, 2011

காபூலின் நட்சத்திர ஹோட்டலில் தலிபான்களின் பாய்ச்சல்..

U.S. commando soldiers walk towards the the Inter Continental hotel after it was attacked by militants in Kabul, Afghanistan, Wednesday, June 29, 2011. Nகாபூலில் ஆப்கானிய அரசிற்கு சொந்தமான ஐந்து நட்சத்திர ஆடம்பர ஹோட்டலினுல் (Hill Top Global InterContinental) திடீரென புகுந்து மின்னல் வேக தாக்குதலை தலிபான் போராளிகள் நாடத்தியுள்ளனர். அவர்களது தாக்குதல் இலக்கை அவர்களால் வெற்றிகரமாக அடையமுடியாமல் அதில் ஈடுபட்ட 9 தலிபான் போராளிகளும் ஆப்கானிய பொலிஸார் மற்றும் ஹோட்டல் சிப்பந்திகள் என 12 பேருமாக மொத்தம் 21 பேர் பலியாகியுள்ளனர்.


தாக்குதல் செய்திகேட்டு உடன் விரைந்த நேட்டோ உலங்கு வானுர்திகளின் துணையுடன் ஆப்கானிய அரச கொமாண்டோக்கள் பதில் தாக்குதலை நடாத்தி தலிபான்களை கொன்றதோடு பொதுமக்களையும் காப்பாற்றியுள்ளனர். ஆப்கானிய பாதுகாப்பு உயர்மட்ட கூட்டம் நடைபெற்ற போதே மேற்படி தாக்குதல் நிகழ்த்தப்பட்டமையானது, போராளிகளின் இலக்கு பொதுமக்கள் அல்ல என்பதும் பாதுகாப்பு மாநாட்டில் கலந்து கொண்ட உயர்மட்ட அதிகாரிகள் என்பதும் தெளிவான உண்மையாகும்.

ஆனால் மேற்கத்தைய ஊடகங்கள் பொது மக்கள் பலியானதை ஆதாரமாக காட்டி போராளிகள் பொதுமக்களை கொன்றொழித்ததாக பிரச்சாரம் செய்துள்ளன. 2014ல் ஆப்கானில் இருந்து அந்நிய படைகள் வெளியேறும் எனும் ஒபாமாவின் அறிவிப்பு வெளியாகி 72 மணிநேரத்தினுல் மேற்படி தாக்குதல் நடாத்தப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment