Pages

Saturday, July 2, 2011

மெரோக்கோ மக்கள் எழுச்சி!! அச்சத்தில் மன்னர் முஹம்மத்

மொராக்கோவில் நேற்று நடாத்தப்பட்ட கருத்துக்கணிப்பு வாக்கெடுப்பில் ஜனநாயக சீர்திருத்தங்களை அரசியல் யாப்பில் அறிமுகப்படுத்தும் முடிவிற்கு ஆதரவாக வாக்களித்துள்ளதாக மொரோக்கா அரசு அறிவித்துள்ளது. 98 விகிதமானவர்கள் மன்னரிடம் அதிகாரங்கள் இருக்க வேண்டும் என விரும்வுபதாக வாக்களித்துள்ளதாக தெரிவித்துள்ளது. மேற்படி முடிவை மொரோக்கோ எதிர் கட்சிகள் வன்மையாக கண்டித்துள்ளதுடன் இது ஒரு ஜனநாயக பித்தலாட்டம் எனவும் குறிப்பிட்டுள்ளன.

முப்படைகளின் தலைவராகவும், மத விவகாரங்களின் தலைவராகவும் மன்னர் இருப்பதுடன் நாட்டின் ஜனாதிபதியை நியமிக்கவும் பதவியிறக்கவும் மன்னரிற்கு அதிகாரம் உள்ளதென புதிதாக வரையப்பட்ட யாப்பு சொல்கிறது. இது யன்னலிற்கு புதிய கேர்டின் போடும் செயல் என அனைத்து எதிர்க்கட்சிகளின் கூட்டமைப்பு கேலி செய்துள்ளது. ஆயிரம் வருடம் பழமை வாய்ந்த மன்னராட்சியை மேலும் வலுப்படுத்தவே அரசின் இந்த செயல் வழி வகுக்குமெனவும் அவை குறிப்பிட்டுள்ளன.

மொராக்கோவில் உருவாகியுள்ள அரச எதிர்ப்பு போராட்டங்களை சமாளிக்கவே அரசு மேற்படி வாக்கெடுப்பை நடாத்துவதாக மொரோக்கோ இளைஞர் அமைப்பான பெப்ரவரி 20 இயக்கம் அறிக்கையிட்டுள்ளது. நாட்டில் 32 மில்லியன் மக்கள் வேலையில்லாமல் இருக்கின்றார்கள் எனவும் நாட்டின் வளங்கள் மன்னர் குடும்பத்தால் தவறாக பயன்படுத்தப்படுவதாகவும் அது குற்றம் சாட்டியுள்ளது. 47 வயதான மொரோக்கோ மன்னர் நான்காம் முஹம்மத் பஹ்ரைன் போன்று மக்கள் போராட்டம் வீதிகளில் வெடிக்காமல் ஆவன செய்யுமாறு அந்நாட்டு இராணுவத்தையும் பொலிஸாரையும் கேட்டுள்ளார்.


No comments:

Post a Comment