Pages

Monday, July 11, 2011

பதவியில் தொடர்ந்து நீடிக்கப் போகும் யென் ஜனாதிபதி!!

 தாக்குதல் ஒன்றில் படுகாயம் அடைந்த யெமன் ஜனாதிபதி அலி அப்துல்லா ஸாலிஹ் ஒரு மாதத்தின் பின்னர் தேசிய தொலைக்காட்சில்நேற்று தோன்றி உரையாற்றியுள்ளார். யெமன் ஜனாதிபதி  ஸாலிஹ் கடந்த ஜூன் மாதம் 3 ஆம் திகதி வெள்ளிகிழமை அவரின் ஆடம்பர மாளிகை மீது இடம்பெற்ற செல் தாக்குதல் ஒன்றில் படுகாயம் அடைந்த நிலையில் சவூதி அரேபியாவின் இராணுவ மருத்துவ மனையில் சிகிச்சை பெற்றுவந்தார்.

இவரின் நீண்டகால ஆட்சிக்கு எதிராக மக்கள் கடந்த நான்கு மாதங்களாக ஆர்பாட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். நேற்று உரையாற்றியுள்ள ஸாலிஹ் எதிர் தரப்பை பேசுக்கு வருமாறும் அதன் ஊடாக தனது அரசியல் யாப்புக்கு உட்பட்ட அதிகாக பகிர்வுக்கு தான் தயார் என்றும் தெரிவித்துள்ளார் விரிவாக
இதன் மூலம் தான் பதவி விலக போவதில்லை என்று தெரிவித்துள்ளதாக விமர்சகர்கள் தெரிவித்துள்ளனர். பல பலமான கோத்திரங்களை கொண்டுள்ள யெமன் சமூக கட்டமைப்பில் பல கோத்திரங்கள் இவரின் ஆட்சிக்கு எதிராக ஆர்பாட்டங்களில் ஈடுபட்டு வருகின்றது. அதேவேளை ஆயுத குழுக்களும் இயங்கிவருகின்றன.
யெமனில் அல் காயிதாவின் செல்வாக்கு  இருப்பதாக மேற்கு நாடுகள்  தெரிவித்து வருகின்றது. அதேவேளை   மேற்கு நாடுகள் அலி அப்துல்லா ஸாலிஹ் பதவி விலகவேண்டும் என்ற உண்மையான அழுத்தத்தை பிரயோகிக்காமல் இருப்பதாகவும், மேற்கு நாடுகள் ஊழல் நிறைந்த அரசுக்கு ஆதரவு வழங்கிவருவதாகவும், இந்த மேற்கின் நிலைப்பாடு மேலும் யெமனில் நிலையை மோசமாக்கும் என்றும் அரசியல் விமர்சகர்கள் தெரிவித்துள்ளனர் .
 
1 Votes

No comments:

Post a Comment