Pages

Monday, July 11, 2011

அமெரிக்க நிதி உதவி பாகிஸ்தானிற்கு முடக்கம் - இந்தியா வரவேற்பு

பாகிஸ்தானில் பதுங்கியிருக்கும் முஸ்லிம் போராளிகளை ஒழிக்க அந்நாட்டுக்கு அமெரிக்கா ரூ.10 ஆயிரம் கோடிக்கு மேல் நிதி ஒதவி வழங்கி வருகிறது. ராணுவ தளவாடங்கள் வாங்க இந்த நிதி பயன்படுத்தப்பட்டு வருகிறது. ஆனால் முஸ்லிம் போராளிகளின் சொர்க்கமாக பாகிஸ்தான் விளங்கி வருகிறது. கடந்த 7 ஆண்டுகளாக பாகிஸ்தானில் பதுங்கி இருந்த அல்கொய்தா தலைவர் பின்லேடன் அமெரிக்க ராணுவத்தினரால் சுட்டுக் கொல்லப்பட்டார். 
ஹிஸ்புல் முஜாகிதீன், லஷ்கர் இ-தொய்பா உள்ளிட்ட இயக்கங்கள் பாகிஸ்தானின் ஐ.எஸ்.ஐ. உளவு நிறுவனத்தின் ஆதரவுடன் செயல்படுகின்றன. எனவே, தீவிரவாதிகளை ஒடுக்க பாகிஸ்தான் ஒத்துழைப்பு அளிக்கவில்லை என அமெரிக்கா குற்றம் சாட்டியுள்ளது. இந்நிலையில், பாகிஸ்தானுக்கு வழங்க இருந்த ரூ.4 ஆயிரம் கோடி நிதியை அமெரிக்கா நிறுத்தி வைத்துள்ளது. அதற்கான அறிவிப்பை ஒபாமா அரசு அதிகாரபூர்வமாக அறிவித்தது. இதை வெள்ளை மாளிகையின் தலைமை நிர்வாகி பில்தலே டெலிவிஷனில் உறுதி செய்தார்.  

பாகிஸ்தான் நாட்டிற்கு ராணுவ நிதியுதவியில், ஒரு பகுதியை அமெரிக்கா நிறுத்தி இருப்பதை வரவேற்கிறோம். ஆசியா மண்டலத்தில் ஆயுதங்கள் குவிந்து, மண்டலத்தின் சமநிலை பாதிக்கப்படுவதை நாங்கள் விரும்பவில்லை. அமெரிக்காவின் நடவடிக்கையை இந்திய அரசு வரவேற்கிறது' என, வெளியுறவு அமைச்சர் எஸ்.எம்.கிருஷ்ணா டில்லியில் கூறினார்

No comments:

Post a Comment