லிபியா மீது தாக்குதல்கள் தொடருமானால் ஐரோப்பாவை தாங்கள் பல வழிகளிலும் தாக்கப்போவதாக எச்சரிக்கையும் விடுத்துள்ளார். ”உங்கள் அலுவலகங்கள், வீடுகள், தெருக்கள் எனும் வித்தியாசம் பாராது நாங்கள் உங்களை தாக்குவோம். நீங்கள் இதைத்தான் லிபியாவில் செய்து கொண்டிருக்கிறீர்கள்” என சூளுரைத்தார். ”நீங்கள் கிளற்ச்சியாளர்களிற்கு ஆயுதங்களை கொடுக்கிறீர்கள். அப்படியென்றால் நான் பயங்கரவாதிகளிற்கு உங்களை தாக்க ஆயுதங்களை கொடுக்க தயங்க மாட்டேன்” எனவும் கேர்ணல் கடாபி எச்சரித்தார். லொக்கர்பி விமான குண்டுத் தாக்குதலிற்கு பின்னணியில் கேர்ணல் கடாபி முன்பு செயற்பட்டதை இவ்விடத்தில் ஞாபகப்படுத்தலாம்.
இவரது இவ்வுரை வெளியான சில மணிநேரங்களில் பிரான்ஸிய அரச தொலைக்காட்சியில் திரிப்போலி அருகில் உள்ள பேர்பர் பழங்குடியினரிற்கு பிரான்ஸ் பரசூட் மூலம் ஆயுதங்களை விநியோகித்ததை ஒப்புக்கொண்டுள்ளது. கடாபியின் மேற்படி பேச்சை கோமாளித்தனமானது என எடுப்பதா அல்லது இது தொடர்பில் எச்சரிக்கையாக இருப்பதா என்பதை தாங்கள் தீர்மானிக்கப் போவதாகவும் பிரான்ஸிய செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment