கடந்த புதன்கிழமை அமெரிக்க அதிபர் ஒபாமா தலைமையில் பென்டகனில் நடைபெற்ற அதி முக்கியத்துவம் நிறைந்த இரகசிய கூட்டம் சுமார் 8 மணி நேரங்கள் நீடித்துள்ளது. இராஜாங்க பாதுகாப்பு செயளர், செனட் காங்கிரஸ், முப்படை தளபதிகள், சீ.ஐ.ஏ. இயக்குனர், எப்.பீ.ஐ. இயக்குனர், ஆப்கான் மற்றும் ஈராக்கிய தேசங்களில் நிலைகொண்டுள்ள அமெரிக்க படைகளிற்கு பொறுப்பான கட்டளைத் தளபதிகள் போன்றவர்கள் உட்பட சுமார் 39 பேர் மேற்படி நிகழ்வில் கலந்து கொண்டுள்ளனர்.ஈராக் மற்றும் ஆப்கானில் இருந்து படைகளை விலக்கல், ஆப்கான் மற்றும் ஈராக் படைகளின் செலவீன மதிப்பீடுகள், இழப்பீடுகள், அபோதாபாத் தாக்குதல், பாகிஸ்தானுடனான உறவுகள், இந்தியாவுடனான ஒத்துழைப்புகள், விஷேட சிறப்புத் தாக்குதல்களிற்கு எதிர்வரும் காலங்களில் ஏற்படும் செலவீனங்கள் போன்ற பல விடயங்களும் அலசி ஆராயப்பட்டு அமெரிக்க வெளியுறவு கொள்கைகளில் செய்ய வேண்டிய மாற்றங்கள் குறித்தும் முடிவுகள் எட்டப்பட்டுள்ளன.
அமெரிக்காவில் மக்கள் மத்தியில் ஏற்பட்டு வரும் யுத்த செலவினங்களால் அவர்களது வாழ்கைத்தரம் தொடர்பான பாதிப்புக்கள் தொடர்பான எதிர்புணர்வு மற்றும் பாகிஸ்தானிய ஐ.எஸ்.ஐ. இயக்குனர் சுஜா பாஷாவின் காட்டமான அமெரிக்க எதிர்ப்புணர்வு போன்றவையே அவசரமாக மேற்படி கூட்டம் நடை பெற அடித்தளமிட்டுள்ளன.
No comments:
Post a Comment