இரு தரப்பு பேச்சுவார்த்தையில் மூன்றாம் தரப்பாக முஸ்லிம்கள் இணைத்துக் கொள்ளப்பட வேண்டும் என இலங்கையின் நீதியமைச்சர் ரவூப் ஹகீம் தொடர்ந்து குரல் எழுப்பிய வண்ணம் உள்ளார். இதற்கு ஆதரவாக இலங்கையின் பிரதமரும் கருத்து வெளியிட்டுள்ளார்.
தமிழர் தரப்பு முஸ்லிம்கள் இல்லாத தங்களுக்கான தனி தீர்வை பேச முற்படும் போது, உலகலாவிய அரசியல் அழுத்தங்களை முகங்கொடுக்கள சிங்கள பேரினவாதம் முஸ்லிம்களை பேச்சு வார்த்தை களத்தை நோக்கி பின்னின்று முன்தள்ளுகிறது. முஸ்லிம்களிற்கான பிரச்சனைகளும் சமகாலத்தில் பேசப்பட வேண்டும். அது வெறுமனே வடக்கு கிழக்கு முஸ்லிம்களின் தமிழ் குறுந்தேசியவாததிற்கு எதிரானதாக மட்டுமல்லாமல் தெற்கில் இனவாத ஒடுக்குமுறைகளை அநுபவிக்கும் சிங்கள பேரினவாதத்திற்கும் எதிரானதாகவும் இருக்க வேண்டும். அப்படியான ஒரு பேச்சுவார்த்தையே காத்திரமானதாக முஸ்லிம்களிற்கு அமையும்.
No comments:
Post a Comment