Pages

Friday, July 1, 2011

ஹிஸ்புல்லாஹ்வின் பின்புல அரசியல் என்ன?

ஹிஸ்புல்லாஹ். மத்திய கிழக்கின் நாடில்லாத இராணுவம். இன்னொரு நாட்டு ராணுவத்துடன் மோதும் ஆற்றல் மிக்க இராணுவ கட்டமைப்பை கொண்டுள்ள போராளிகள் அமைப்பு. பல நாடுகளில் உள்ள இராணுவங்களை விட வலிமைமிக்க தாக்குதல் வல்லமையும் தொழில்நுட்பங்களையும் தன்வசம் கொண்டுள்ள அமைப்பு.
அதன் பலமே இராணுவ இயந்திரத்தை மக்கள் இயந்திரமாக மாற்றியதாகும். மத்தியகிழக்கின் ஷியாக்களின் பாதுகாப்பமைப்பு என்றால் மிகையாகாது. ஷியா மதவியலை மக்கள் அரசியலாக்கிய வெற்றிகர பொறிமுறையைக் கொண்டுள்ள அமைப்பு.

அண்மைய லெபனான் போரின் போது இஸ்ரேலிய ஸியோனிஸ ஏகாதிபத்திய கனவிற்கு சமாதிகட்டியது ஹிஸ்புல்லாஹ். பணம் பலம், ஆயுத வளம், மக்கள் தளம் என தன்னிறைவுகண்ட போராளி அமைப்பிது. ஈரானும், சிரியாவும் இதன் வளற்ச்சிக்கு பக்க பலமாகவுள்ள இரு பெரும் இராணுவ தேசங்கள். இந்த ஹிஸ்புல்லாவிற்கு இப்போது மக்கள் செல்வாக்கு சற்று வீழ்ச்சி கண்டுள்ளது.
மத்தியகிழக்கின் மக்கள் போராட்டங்களும் அதன் தொடர் வெற்றிகளும் ஹிஸ்புல்லா தொடர்பான கனைவை களைத்துள்ளது. பஹ்ரைனில் நடந்த மக்கள் புரட்சிக்கு பின்னால் ஹிஸ்புல்லாஹ் போராளிகள் களமிறங்கியதும், சிரியாவில் அரச இராணுவத்துடன் இதே ஹிஸ்புல்லாஹ் போராளிகள் களமிறங்கியதும் எதிர் மறையான செயற்பாடுகள் என ஹிஸ்புல்லாஹ் தொடர்பான நற்பெயரை களங்கப்படுத்தியுள்ளன.

ஹிஸ்புல்லாஹ் உண்மையில் அமெரிக்க, ஸியோனிஸ ஏகாதிபத்தியங்களிற்கு எதிரான அமைப்பா அல்லது ஷியா இஸத்தை முன்கொண்டு செல்லும் இராணுவ ஊடகமா என்பதில் கேள்விகள் பல எழுந்துள்ளன. ஹிஸ்புல்லாஹ்வின் இவ்வாறான அரசியல் செயற்பாடுகள் ஷேய்ஹ் ஹஸன் நஸ்ருல்லாஹ்வின் ”உங்கள் இரத்தம் தான் எங்கள் இரத்தம்” என்று அன்று காஸா சண்டைக்கு பின் பலஸ்தீனியர்களிற்காக முழங்கிய வரலாற்று வார்த்தைகளின் பின் புல அரசியல் என்ன எனும் கேள்விகளை எழுப்புகிறது. என்ன செய்யப்போகிறார் என்ன செய்யப்போகிறார் அயாத்துல்லாஹ் ஸிஸ்தானியின் சீடர்???

No comments:

Post a Comment